மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் 45.4 சதவீதமாக குறித்த நீர் மட்டம் குறைவடைந்து உள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்து தன் காரணத்தால் நீரில் மூழ்கிக் கிடந்த கதிரேசன் ஆலயம், விகாரை, புத்தர் சிலை, பள்ளிவாசல் மற்றும் மஸ்கெலியா பழைய நகரம் போன்றவை தென்பட ஆரம்பித்துள்ளன.
மேலும் மத்திய மலைநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெயில் இருந்தாலும் காரணங்கள் நிலவி வருகின்றது.
இதன் பிரகாரம் நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்யாத காரணத்தால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.



