நாட்டில் இன்றைய தினமும் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய மின் கட்டமைப்பில் 541 மெகாவாட் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதன் பிரகாரம் இன்றைய தினமும் ஏ. பி. சி என்ற மூன்று வலயங்களில் தலா இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏனைய வலயங்களில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மேலும் ஏ.பி.சி ஆகிய வலயங்களில் பிற்பகல் 4 30 முதல் இரவு 10.30 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மேலும் ஏ. பி. சி தவிர்ந்த ஏனைய வலயங்களில் இதே காலப்பகுதியில் மூன்று மணிநேரம் மின்சாரம் தடை அமுலாகும்.



