ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு பன்னீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த பன்னீரில் கொஞ்சமாக சந்தனம் போட்டு நன்றாக கரைத்து விடுங்கள்.
இப்போது இந்த தண்ணீரில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விளக்கு திரியை போட்டு நன்றாக நினைத்துவிட வேண்டும்.
அதன் பின்பு இந்த விளக்கு திரிகளை எடுத்து வெய்யிலில் உலர வைத்தாலும் சரி அல்லது நிழலிலேயே வீட்டுக்குள்ளேயே வைத்து நன்றாக உலர வைத்தாலும் சரி, திரியில் இருக்கும் ஈரம் சுத்தமாக காய்ந்து விடும்.
ஆனால் திரியில் வாசம் நிறைவாக இருக்கும்.
வாசம் நிறைந்த இந்த திரியை போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வரும் பட்சத்தில், இந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் என்பது தங்காது.
உங்களுடைய முயற்சிக்கு தடையாக நிற்கும் எல்லா விஷயங்களையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த வாசத்திற்கு உண்டு.
காலை ஏற்றிய விளக்கு அப்படியே நாள் முழுவதும் உங்கள் வீட்டில் எரிந்தாலும் தவறு கிடையாது.
இரவு தூங்க செல்லும் முன்பு விளக்கை மலை ஏற்றிவிட்டு தூங்குங்கள்.
உங்களுடைய வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த தீபச்சுடர் கூடியவிரைவில் நிலையான ஒரு தீர்வை கொடுக்கும்.
பணப் பிரச்சினைகள் தீர தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.
நம்பிக்கை உள்ளவர்கள் உங்களுடைய முயற்சியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சீக்கிரம் வெற்றி காண்பீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
