கொழும்பு மக்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

0

நாட்டின் சில பகுதிகளில் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம் இன்று காலை 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை இந்த நீர் விநியோகம் தடைப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 01, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 08 மற்றும் 11 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply