சென்னை அண்ணா சாலையில் இடம்பெறும் கார் ரேசை தடுப்பதற்கு விர நடவடிக்கை.

0

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் இடம்பெறும் கார் ரேசை தடுப்பதற்கு காவற்துறையினரால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்தது விபத்துக்கு உள்ளாகி உள்ளது

தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இதில் சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சூப்பர் மார்கெட்டில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தை ஏற்ப்படுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் அருகே இருந்த மற்றொரு காரில் தப்பித்து சென்று விட்டனர்.

கார் சூப்பர் மார்கெட்டில் மோதியதில் அங்க இருந்த உரிமையாளர் காயம் அடைந்தள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவற்துறையினர் காயம அடைந்தவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply