இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திக்க எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடு நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது.

இருப்பினும் கொவிட் பரவல் சூழ்நிலையால் குறித்த சந்திப்பு தாமதமாகி வருகின்றது.

Leave a Reply