ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்.

0

இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக் கழகம் தரம் உயர்த்தப்பட்டு அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்குரார்ப்பனம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறிலங்கா அரச தலைவரின் வவுனியா வருகைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவல்துயைினர் தடுத்துநிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply