ஆபத்தில் மூழ்கும் யாழ் மாவட்டம்.

0

தற்போது நாட்டில் டெங்குக் காய்ச்சலின் அபாயம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தீவிரமான டெங்குக் காய்ச்சல் அபாயமுள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ். மாவட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் யாழ். மாவட்டமும் அடங்குவதாகவும் யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply