பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாலும்,
இதன் காரணமாக இனி பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



