மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அத்துடன் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தின.
இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை நேற்று திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



