பேருந்தில் பயணிப்பவர்களுகு்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய தொலைபேசி சேவையை தேசிய போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான பேருந்து ஊழியர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் காணொளிகளை இந்த இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலன் மிராண்டா தெரிவித்துள்ளார். இதற்காக 071 2595555 என்ற புதிய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப், வைபர், இமோ போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அந்த எண்ணுக்கு வீடியோக்களை அனுப்ப முடியும். சட்ட விரோத செயல்கள் தொடர்பான விசாரணையில் அந்த வீடியோக்கள் ஆதாரமாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கமான 1955க்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



