உங்கள் வீட்டில் இடம் இல்லை என்றாலும் சிறு தொட்டியிலாவது இந்த ஒரு செடியை மட்டும் தவறாமல் வளர்த்து வாருங்கள்.

0

பணம் பல வழிகளில் நம்மைத் தேடி வருகிறது. இதற்காக சுக்கிரனிடம் வரம் பெற்ற மருதாணி செடியை தான் நமது வீட்டில் வளர்க்க வேண்டும்.

இதற்காக ஒரு மருதாணி செடியை வாங்கி வந்து, அதனை ஒரு சிறு தொட்டியில் வைப்பதற்கு உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் வளாகத்தில் இருந்து சிறிதளவு மண் எடுத்து வர வேண்டும்.

அல்லது ஆற்றங்கரை, கடற்கரை போன்ற இடங்களில் இருந்தும் மண் எடுத்துக்கொள்ளலாம்.

பின்னர் இந்த மண்ணையும் செடியுடன் இருக்கும் மண்ணையும் சேர்த்து தொட்டியில் வைப்பதற்கு முன்னர், அந்தத் தொட்டியில் ஒன்பது சில்லறை நாணயங்களை போட வேண்டும்.

பிறகு அதன் மீது இந்த மண் கலவையை கலந்து, செடியை அதில் பக்குவமாக வைக்கவேண்டும்.

பிறகு தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி காலை அல்லது மாலை வேளையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

பிறகு காலை வெளியில் செல்வதற்கு முன்னர் இதிலிருந்து ஒரு இலையைப் பறித்து உங்கள் பணப்பர்ஸில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாலை திரும்பி வந்ததும் இந்த இலையை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

இவ்வாறு தினமும் ஒரு இலையை உங்கள் பர்சில் வைத்து வர, உங்களிடம் வரும் பணம் பல மடங்காக அதிகரிப்பதை சில நாட்களில் உங்களால் உணர முடியும்.

Leave a Reply