கொழும்பு தனியார் மருத்துவ மனையில் மகிந்தவுக்கு சத்திரசிகிச்சை..!!

0

கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரதமரின் வாயில் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்துவராக செயற்பட்டு வரும் வைத்தியர் நரேந்திர பிந்தும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் வைத்தியர் நரேந்திர பிந், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply