தேர்தலில் ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை.

0

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பெப்ரவரி 10ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.

குறித்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கவுள்ளனர்.

அத்துடன் சுயேட்சையாகவும் பலர் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் திருநங்கை ஆகாஷ் என்ற ராதிகா பாய் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply