உலகப் புகழ்பெற்ற கதக் நடன கலைஞன் திடீர் மரணம்.

0

உலகப் புகழ்பெற்ற கதக் நடன கலைஞரான பிர்ஜு மகாராஜ் இன்று காலமானார்.

இவர் சமீபகாலமாக சிறுநீரக கோளாறு காரணமாக டயாலியிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அதற்கு பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார்.

மேலும் இவர் தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவர் கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் “உன்னை காணாத நான்” என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply