பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 660 க்கு மதுவிற்பனை.

0

பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கமான விடயம்.

இந்நிலையில் பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளூர் தினம் கடைப்பிடித்தால் மதுக்கடைகள் மூடப்படும்.

இந்த ஆண்டு பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமுல்ப்படுத்தப்படுவதால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மதுபான கடைகள் மூடப்படுகின்றன.

தைப்பொங்கல் தினமான நேற்றைய தினம் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் டாஸ்மாக் கடைகளில் சனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி உற்சாகமாக மது அருந்தியவர்கள் பலர் இரண்டு நாட்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

அத்துடன் ஒரே நாளில் 300 கோடிக்கும் மேல் மதுபானங்கள் விற்க பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12ஆம் தேதி ரூபாய்155.6 கோடிக்கும்,13 ஆம் திகதி ரூபாய்,203.5 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் ரூபாய்,680 கோடிக்கு மேல் மது விற்பனையாகியுள்ளது.

12, 13 ஆம் திகதிகளில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 70.54 கோடிக்கு மது விற்பனையானது.

Leave a Reply