புலத்சிங்கள காவல்துறை பிரிவிற்குட் ஹொரணை மத்துகம பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முச்சக்கர வண்டியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் புலத்சிங்கள காவல்துறை பிரிவிற்குட்பட்ட மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புளத்சிங்கள , திப்போட்டவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



