பழங்காலங்களில் அரச மரத்தை சுற்றி வலம் வந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.
அரச மரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஆன்மீகத்தில் இருக்கும் நம்பிக்கை இரண்டும் சேர்த்து பக்தர்களிடையே அரச மரத்தைப் பற்றிய எண்ணம் மேலோங்கி வளர்ந்திருக்கிறது.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் பேணிக்காக்கும் இந்த அரச மரத்தை எங்கு பார்த்தாலும் விட்டுவிடாமல் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி வழிபடுங்கள் போதும்.
அரச மரத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அடிப்பகுதியில் பிரம்ம தேவரும், நடுப்பகுதியில் நாராயணரும், மேல் பகுதியில் ஈசனும் வாசம் செய்கிறார்கள்.
இதனால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை செய்யும் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் அரசமரத்தை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும்.
மேலும் முப்பெரும் தேவியர் ஆசிகள் கிடைத்து கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று முக்கிய வரங்களும் நமக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அரசமரத்தடியில் தான் புத்தர் ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது.
பகவத் கீதையில் கிருஷ்ணர் நான் அரச மரமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹோமங்கள் செய்ய பயன்படுத்தும் அரச மர குச்சிகளும் இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.
இத்தகு சிறப்புகள் வாய்ந்த அரச மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றி விட்டு 11, 21, 54, 108, 1008 போன்ற எண்ணிக்கைகளில் நீங்கள் வலம் வந்தால் வேண்டிய வரம் கிடைக்கும்.
அரச மரத்தை சுற்றி இது போல் திங்கட்கிழமையில் நீங்கள் வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
செவ்வாய்க்கிழமையில் வலம் வர பதவி உயர்வு, காரிய சித்தி உண்டாகும்.
புதன் கிழமையில் வலம் வர தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
வியாழக்கிழமையில் வலம் வர கல்வி அறிவு சிறப்பாக இருக்கும்.
வெள்ளிக்கிழமையில் வலம் வர கட்டுக்கடங்கா கடன்கள் தீரும், சனிக்கிழமையில் வளம் வர தீரா பிணிகள் தீரும்,
ஞாயிற்றுக்கிழமையில் வலம் வர குடும்பத்தில் இருக்கும் சகல பிரச்சனைகளும் நீங்கும்.
இப்படி ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பலன்களைக் கொடுக்கக் கூடிய இந்த அரசமர வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு பயனடையலாமே.
