தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள்…!

0


காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.

வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

சிகப்பு நிற பருத்தி துணியால் செய்த திரியை கொண்டு விளக்கேற்றுவதால், திருமண தடை மற்றும் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கும்.

மஞ்சள் நிற பருத்தி துணியால் செய்த திரியை கொண்டு தீபமேற்றுவதால் அன்னை பராசக்தி அருள் முமுமையாக கிட்டும்.

தாமரை நார் திரி அதாவது தாமரை மலர்களின் தண்டை உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும்.


வாழை மர பட்டையில் இருக்கும் நாரை நிழலில் உலர்த்தி, காய வைத்து, நாம் ஏற்றும் தீபத்தில் திரியாக போட்டு விளக்கேற்றினால் நாம் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். மேலும் நமது பித்ருகளாகிய மறைந்த நம் முன்னோர்களின் சாபங்களையும் நீக்கும்.

பருத்தியால் செய்யப்பட்ட திரியை போட்டு விளக்கேற்றி வந்தால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ஒரு திணியை பன்னீரில் ஊறவைத்து, பின்பு அதை உலர்த்தி அந்த துணியை சிறிய திரிகளாக மாற்றி வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வந்தால் லட்சுமி தேவியின் அருட்பார்வை நம்மீது விழும். மேலும் நமக்கு மன அமைதியை ஏற்படுத்தும். – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply