வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் இந்தியாவில் தரை இறங்கிய பின்னர் ஒரு வாரகாலம் கட்டாய சுய தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும்.
அத்துடன் எட்டாவது நாளில் கொவிட் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



