யாழ் நகரில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு திருடன் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் யாழ் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்து கொண்டு முதியவர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு துவிச்சக்கரவண்டியில் திருடன் தப்பி ஓடியுள்ளான்.
மேலும் அந்த முதியவரிடம் இருந்து சுமார் 47,000 ரூபா பணம் இவ்வாறு அபகரித்து செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



