மன்னர் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மின் உற்பத்தி நிலையத்துக்கான டெண்டர் கோருவதற்கு சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க போவதாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கைக்கு அடிப்படிய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்



