இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபான போத்தல்களுக்கே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும்.
அத்துடன் சட்டவிரோதமான மதுபான விற்பனையை தடுக்கும் வகையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



