வட மாநிலங்களில் கடும் குளிர்மையான வானிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
இதற்கமைய குறித்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கட்டடங்கள், வாகனங்கள், மரங்கள் என்பவற்றில் பனி மூடி காணப்பட்டன.
அத்துடன் அங்குள்ள பத்ரிநாத் கோவில் பகுதிகளில் நீடித்த பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அதிகாலை வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.
அவ்வாறு அடுத்த ஒரு வாரத்தில் பனிப்பொழிவு நீடிக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



