கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த விபத்தின் மூலம் எந்தவிதமான உயிர்ச் சேதமும் பதிவாகவில்லை.
கன்டர் வாகனம் சிறிய ரக பிக் அப் வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற இயக்கச்சி பாற்ண்பணை நோக்கி திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



