இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய இவர் இன்று காலை 10 மணியளவில் இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
அத்துடன் இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
மேலும் சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் சுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



