பால்மா இறக்குமதி பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுபாட்டுக்கு நிவாரணம் கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய டொலர் தொடர் தட்டுப்பாட்டுக்கான தீர்வு வழங்கப்படும் வரையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளான.
அத்துடன் டொலர் தட்டுப்பாடு காரணத்தால் 50 சதவீதமான பால்மாக்களை இறக்குமதி செய்ய முடிகின்றது…
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் மீண்டும் திருத்தம் ஏற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் எரிபொருள், ஒளடதம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



