இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply