பண்டிகை காலத்தை முன்னிட்டு கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுப்பதற்காக செயலூக்கி தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய இரண்டாம் தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்த சகலரும் இந்த செயலூக்கியை செலுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எந்த நிலையத்திலும் செயலூக்கி தடுப்பூசியை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



