கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்பு.

0

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் காலி- அக்மீமன காவல்துறை பிரிவிற்குட்பட்ட தல்கம் பொல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்நிலையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply