சுடுகாட்டிற்கு அருகில் உங்கள் வீடு இருக்கிறதா?

0

சுடுகாட்டிற்கு அருகில் வசிக்கும் நிலையில் இருக்கும் நபர்கள் இத்தகைய தோஷத்திற்கு பரிகாரமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரும் வரையில் தங்கள் வீடுகளில் இருக்கின்ற துளசிச் செடிக்கு 3 கையளவு ‘ஜல தர்ப்பணம்” எனப்படும் தண்ணீர் விடும் சடங்கை செய்ய வேண்டும்.

மேலும் சூரிய பகவானையும், அக்னி பகவானை நினைத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரேத தோஷம் நீங்க வேண்டும் என மனதார வேண்டி, பிறகு உங்கள் வலது உள்ளங்கையில் சிறிதளவு நீரை வைத்துக் கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்ப தோஷம் நிவாரய நிவாரய” என்கிற மந்திரத்தை மூன்று முறை துதித்து வலது கையில் இருக்கும் தண்ணீரை உங்கள் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு 7, 14, 21 என்கிற எண்ணிக்கையில் கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் குங்குமத்தை போட்டு, அதில் சிறிதளவு நீர் விட்டு நன்கு கலக்கி, ஒரு மாதுளை செடியின் குச்சியை கொண்டு அந்த குங்குமத்தை தொட்டு கோதுமை உருண்டைகளின் மீது “ஸ்ரீம்” என எழுதி அந்த கோதுமை உருண்டைகளை கோயில் குளம், ஆறு போன்றவற்றில் இருக்கின்ற மீன்களுக்கு உணவாக வீசிவிட வேண்டும்.

இந்தப் பரிகாரத்தை வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்ய வேண்டும்.

இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரேத தோஷம் நீங்கி லட்சுமி தேவியின் அருள் கிடைத்து சீரான வருமானம் வர வழிவகுக்கும்.

சுடுகாட்டிற்கு அருகில் இருக்கும் வீடுகளில் நிரந்தரமாக வசிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு முறை செய்வது சிறப்பு.

Leave a Reply