பூஸ்டர் தடுப்பூசி அவசியம்?

0

கொவிட் வைரஸ் பெருந் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் 2 டோஸ்களை கொண்ட கோவிஷீல்ட், கோவைக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கொவிட் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அனுமதி அளித்தனர்.

ஆனால் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை..

தற்போது ஒமைக்ரோன் உருமாற்றம் வைரஸ் அச்சுறுத்தி வருகின்றன.

இதன் வீரியம் அதிகமாக இருப்பதால் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் தேவை எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃ ப் இந்திய நிறுவனம் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம் தானா? என்பது குறித்து தேசிய தொழில் நுட்பம் ஆலோசனை குழு ஆலோசனை நடத்துகின்றது.

Leave a Reply