தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “வீரமே வாகை சூடும் “எனும் திரைப்படமாகும்.
குறித்த படத்தை அறிமுக இயக்குனர் து. ப சரவணபவன் இயக்கியுள்ளார்.
அத்துடன் டிம்பில் ஹயாதி நாயகியாக நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர். என். ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ். ஜி. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிகார பலம் படைத்தவர்கள் எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவரின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் ஐராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 2002 ஜனவரி 26ஆம் திகதி வெளியிட எதிர்பார்த்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



