கழிவுகளை அகற்றும் முகாமைத்துவப் பணி.

0

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை மூலமாக வெள்ளைமணல் குடாக்கரை பகுதியில் உள்ள உள்வீதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக் கழிவுகளை அகற்றுவதில்லை என முறைப்பாடுகளை பதிவு செய்தனர் .பல காலமாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை .

அப்அந்த பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க ஆரம்ப கட்டமாக குடாக்கரை உள்வீதியிலும் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று (20)இடம் பெற்றது.

குறித்த பிரதேச சபையின் உப தவிசாளர் தலைமையில் இப் பகுதியில் உள்ள சிறிய உள்விதிகளிலும் டெக்டர் மூலமாக கழிவுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் தரம் பிரித்தல், கழிவு முகாமைத்துவம் போன்ற விடயங்களும் மக்களுக்காக இதன் போது எடுத்துகூறப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பிரதேச சபை உபதவிசாளருக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

அசுத்தமற்ற கிராமத்தை உருவாக்கி சூழலை சுத்தமாக பேணும் நோக்குடன் இப்பணி இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply