தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சினேகா.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து புகழ்பெற்றவர்.
அத்துடன் 2009ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
திருமணத்திற்கு பின்னரும் இவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவற்றுள் அவர் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காகக் கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசை காட்டியதன் பேரில் ரூபா ஒரு இலட்சம் கொடுத்ததாகவும் இதற்காக மாதம் 180 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் , ஆனால் 5 மாதமாகியும் பங்குத் தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோது பணம் தரமுடியாது என்று அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



