மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை ஆராயும் நோக்கிலேயே குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி பேருந்துகளின் இருக்கைகளுக்கு கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்வது , முகக் கவசம் அணியாமல், குளிரூட்டப்பட்ட பேருந்துக்குள் நடமாடும் வர்த்தகர்கள் நுழைதல் போன்ற நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையின் போது 318 பேருந்து ஊழியர்கள் , 65 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 505 வர்த்தக நிலையங்கள் என்பவற்ற்கு சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



