தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலைக்கும் மத்தியில் பொது மக்களை ஒன்று கூட்டி மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விடயத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தலவாக்கலை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுகதர வழிகாட்டுதலின் படி இதுபோன்ற சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே சுகாதார நெறிமுறைகளை மீறும் அமைப்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்



