இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன அரசாங்கத்திற்கு நன்றி என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.



