பிறந்து 2 மாதங்களேயான குழந்தை பூரான் கடித்து மரணித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தை நேற்று இரவு தனது சகோதரர்களுடன் உறங்கியுள்ளது.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை குறித்த குழந்தையிடமிருந்து எந்தவிதமான அசைவுகளும் இடம்பெறவில்லை.
இதனையடுத்து குழந்தை வைத்தியசாலைக்கு பெற்றோர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
இருப்பினும் இந்த குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த குழந்தையின் மரணத்திற்கான காரணம் பூரான் கடித்தமையே எனக் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



