திருமண நிகழ்வினை நடத்த அனுமதி தாருங்கள்!

0

எதிர்வரும் 1ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் சிறிய அளவிலான திருமணங்கள் நடத்தும் சங்கங்கத்தினர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தற்போது நாட்டில் பரவல் அடைந்து வரும் கொவிட் அச்சுறுத்தலான நிலையில் சிறிய மக்கள் கூட்டத்துடன் இந்த திருமணத்தை நடத்து வதற்கு அனுமதி வழங்குமாறு கொவிட் குழுவிடம் அந்த சங்கத்தின் தலைவர் சுமித் ரங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு இந்த திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருக்க வேண்டும் .

இந்நிகழ்வில் குடும்பத்தினர் மாத்திரம் இதில் கலந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருந்தனர்.

Leave a Reply