செல்வம், வம்ச விருத்திக்கு சம்பத் கவுரி விரதம்

0


சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.

மனித வாழ்வுக்கு அவசியமானது உணவு, உடை, உறைவிடம். பழங்காலத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் உயர்ந்த செல்வங்களாக போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. இந்த அன்னை பசுவுடன் காட்சி அளிப்பாள்.

இந்த அன்னையே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடை நாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

காசி அன்னபூரணியையும் சம்பத் கவுரி என்பார்கள். இந்த அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply