மேல் மாகாணத்தில் நில அதிர்வுகள் சம்பந்தமான விடயங்களை கண்காணிக்கும் ஐந்தாவது மையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை!

0

இலங்கையில் மேல் மாகாணத்தில் மேல் நில அதிர்வுகள் சம்பந்தமான விடயங்களை கண்காணிக்கும் ஐந்தாவது மையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் குறித்த தகவலை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்,

இதற்கமைய கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

அத்துடன் லுகணம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டின் மேலும் சில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply