கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
இதற்கமைய குறித்த சம்பவம் மகியங்கனை – மொரகெட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி தம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மொரகெட்டிய பகுதியைச் 59 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மகியங்கனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



