நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்புக்கு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இலங்கையில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இளைய சமுதாயத்தினரின் மத்தியில் குறித்த தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதால் கருவுறுதல் பிரச்சனை ஏற்படும் என்ற சந்தேகம் பரவலாக காணப்படுகின்றமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் உலக நாடுகளில் குறித்த விடயம் தொடர்பில் எந்தவிதமான ஆராய்ச்சியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆகவே இளைஞர் யுவதிகள் எந்தவிதமான பயமும் இன்றி கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



