மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய 76,000 பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த தடுப்பூசி தொகை நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக நாட்டிற்கு எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாரம் இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 120,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் 40 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசியும் நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



