மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலக தீர்மானிப்பதாக பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதியுடன் தான் பதவி விலகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த ராஜதந்திர குமாரசுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 2019 டிசம்பர் 24 ஆம் திகதி பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15 வது ஆளுநராக நியமிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



