நாடு பூராவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபார்ம் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கும் சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசியை செலுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள 369 சிறைக் கைதிகளுக்கும் இன்று கொவிட் தடுப்பூசி செலுலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



