பத்தினிபுரத்தில் காட்டு யானை தொல்லையால் பயிர் நிலங்களுக்கு பலத்த சேதம்.

0

திருகோணமலை மாவட்டம்_தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பத்தினிபுர கிராமத்தில் நேற்று அதிகாலை நுழைந்த காட்டு யானையால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலியை உடைத்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தங்களது பயிர் நிலங்களான வாழை,தென்னை,கத்தரி,வெண்டி,மரவள்ளி போன்ற பல பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாது சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது.

பாதுகாப்பான யானை வேலி உரிய பகுதிகளில் இன்மை உள்ளிட்ட பல காரணங்களினால் யானை தொல்லை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை தொல்லை தொடர்பில் உரியவர்களுக்கு பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து கவலயடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தங்களது உயிருக்கு உத்தரவாதமின்றி வாழ்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை தொல்லையில் இருந்து தங்களுக்கான நிரந்தர தீர்வு கிட்டும் வரை அம்மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் உரிய அரச அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply