மீள்குடியேற்றத்திட்டத்தினூடாக 89 பயனாளிகளுக்கு நிதி உதவி!

0

கிண்ணியாவில் மீள்குடியேற்றத்திட்டத்தினூடாக 89 பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலகததிற்கு உற்பட்ட சுமார் 89 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றத்திட்டத்தின் ஊடாக வீடமைப்புக்கான நிதி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 28 மலசல கூடங்கள் அமைப்பதற்கான 2ம் கட்ட நிதியும் திரூகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வினை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் ஏற்பாடு செய்திருந்ததோடு புதிய 607 சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சிப்தொர புலமைப்பரிசில் திட்டத்தினூடாக சமுர்த்தி பயனாளிக் குடும்ப மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இதனை அடுத்து 2 பயனாளிகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவியும் வழங்கப்பட்டதுடன், 67 மீனவ தொழில் செய்யும் மீன்பிடி பயனாளிகளுக்கு வலைகளும் வழங்கப்பட்டதுடன் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 பயனாளிகளுக்கான முந்திரிகை மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவான் அதுகோரல அவர்களும், அவரது இணைப்பாளர்களான எம். சப்ரி மற்றும் ஏ.எம். உவைஸ் அவர்களும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டி கோராள , கிண்ணியா பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் , கணக்காளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply