கிளிநொச்சியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!

0

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமையஅக்கராயன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வனேரிக் குளம் பகுதியில் நிலத்தைப் பண்படுத்தி கொண்டிருந்த வேளையில் குறித்த கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டன.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த கைக் குண்டுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர் மூலம் அவற்றை அகற்றி அதனை செயல் இழக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்

Leave a Reply